ஆயிஷா(ரழி) பற்றி அல்லாஹ்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX6pFK9dFbJSrJmm0zGqFRpCdcVCkKUrgvT1jpr4VEGkPz1XBqEGz37U0J9JgU8h2OB9bX3O2lfmle0yOdqdGEIxccXwid8RHErYTZTQrwgpjDudbztjYyIuJowGdEQ5QcHkE_BbwUTh4/s72-c/untitledg.bmp
ஏக இறைவனான வல்ல அல்லாஹ்வின்
திருப்பெயரைக் கொண்டு,
அஸ்ஸலாமு அழைக்கும் வ-ரஹ்மத்து...
அஸ்ஸலாமு அழைக்கும் வ-ரஹ்மத்து...
ஏக இறைவனான வல்ல அல்லாஹ்வின்
திருப்பெயரைக் கொண்டு, அஸ்ஸலாமு
அழைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரஃஆத்துஹ் சகோதர சகோதரிகளே... எவர்கள் பழி
சுமத்தினார்களோ, நிச்சயமாக
அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள்
எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு
மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப
தண்டனை) இருக்கிறது மேலும், அ(ப்பழி
சமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.
முஃமினான ஆண்களும், முஃமினான
பெண்களுமாகிய நீங்கள் இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்)
பற்றி நல்லெண்ணங் கொண்டு, "இது
பகிரங்கமான வீண் பழியேயாகும்" என்று கூறியிருக்க வேண்டாமா? அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு
சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள்
சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள்
தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள். இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில்
ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க்
கொண்டு, உங்களுகு; குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப்
பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி
விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.
இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, "இதைப்
பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்" என்று
நீங்கள் கூறியிருக்கலாகாதா? நீங்கள்
(திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால்
மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான். இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு
(நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும்
அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம்
மிக்கோன். எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ
வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு
நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு அல்லாஹ்
(யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால்
(உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையயோனாகவும் இருக்கின்றான்.
(அல்-குர்ஆன் : சூரா அந்நூர் (11 to 20))
.
கருத்துரையிடுக