நபி(ஸல்) வரலாறு வினா விடைகள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு .
நபி(ஸல்) வரலாறு வினா விடைகள்
இறைத்தூதர்களில் இறுதியானவராகவும் இஸ்லாத்தின் வழிகாட்டியாகவும் வந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்வது முஸ்லிம்களின் மீது முக்கிய கடமையாகும். அவர்களின் வரலாறுகள் தொடர்பாக ஏராளமான நூல்கள் வந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் ஆதாரமில்லாத கற்பனைச் செய்திகளே நிறைந்துள்ளன.
இந்தக் குறையை நிறைவு செய்யும் வண்ணமும் நமது குழந்தைகளுக்குக் கேள்வி பதில் வடிவத்தில் எளிமையாகக் கற்றுக் கொடுப்பதற்கும் இந்தத் தொடரை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இத்தொடரைப் படிக்கும் சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை முழுமையாக அறிந்த திருப்தி ஓரளவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இத் தொடரை உங்கள் குழந்தைகளை படிக்கச் சொல்லுங்கள். அல்லது நீங்கள் படித்து நபிகளாரின் வரலாறை சொல்லிக் கொடுங்கள்.
கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதின் துவக்கம் எவ்வாறு இருந்தது?
பதில்: நல்ல கனவுகளாக வந்தன. (ஆதாரம்: புகாரீ 4)
கேள்வி: நல்ல கனவுகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய
விளக்கம் என்ன?
பதில்: நபித்துவத்தில் நாற்பத்து ஆறில் ஒரு பகுதி என்று விளக்கம் அளித்தார்கள். (ஆதாரம்: புகாரீ 6983)
கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வருவதற்கு முன்னர் அவர்கள் எங்கு தியானம் செய்தார்கள் ?
பதில்: மக்காவிலுள்ள ஹிரா எனும் குகையில்
(ஆதாரம்: புகாரீ 4)
கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையாவது வயதில் இறைச் செய்தி வந்தது?
பதில்: நாற்பதாவது வயதில் (ஆதாரம்: புகாரீ 3851)
கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் இறங்கிய வசனங்கள் எவை? எவை?
பதில்: திருக்குர்ஆனின் 96வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள். (ஆதாரம்: புகாரீ 4)
கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தியை கொண்டு வந்தவர் யார் ?
பதில்: ஜிப்ரீல் (அலை) (ஆதாரம்: புகாரீ 5)
கேள்வி: முதல் வஹீ வந்த போது பயந்த நபி (ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறியவர் யார்?
பதில்: நபி (ஸல்) அவர்களின் மனைவி அன்னை கதீஜா (ரலி) (ஆதாரம்: புகாரீ 4)
கேள்வி: நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதாரக்கப்பட்டுள்ளார்
பதில்: வரக்கா பின் நவ்ஃபல் அவர்கள் (ஆதாரம்: புகாரீ 4)
கேள்வி: வரக்கா பின் நவ்ஃபல் என்பவர் யார்?
பதில்: அறியாமைக் காலத்தில் கிறிஸ்தவராக இருந்தவர். இப்ரானி மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவர். இஞ்சீலை இப்ரானி மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தஇ வயதானஇ கண் தெரியாத முதியவர். (ஆதாரம்: புகாரீ4)
கேள்வி: வரக்கா பின் நவ்ஃபல் அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கும் என்ன உறவு?
பதில்: அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தந்தையின் உடன் பிறந்தவரின் மகன் வரக்கா பின் நவ்ஃபல் ஆவார்.
(ஆதாரம்: புகாரீ4)
கேள்வி: ஜிப்ரீல் (அலை) அவர்களை என்ன பெயரிட்டு வரக்கா பின் நவ்ஃபல் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
பதில்: நாமூஸ் (ஆதாரம்: புகாரீ4)
கேள்வி: இறைத் தூதர்களை அவர்களின் சமூத்தார் என்ன செய்வார்கள் என்று வரக்கா அவர்கள் குறிப்பிட்டார்கள்?
பதில்: ஊரை விட்டு விரட்டுவார்கள். (ஆதாரம்: புகாரீ 4)
கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு முதல் வஹீ வந்த பிறகு தொடர்ந்து வஹீ வந்ததா?
பதில்: இல்லை. சிறிது காலம் நின்றது. (ஆதாரம்: புகாரீ 3238)
கேள்வி: முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் முக்கியமானவர்கள் யார்? யார்?
பதில்: வரக்கா பின் நவ்ஃபல் (ரலி, அன்னை கதீஜா (ரலி), அபூபக்ர் (ரலி), அலீ (ரலி), ஸைத் பின் ஹாரிஸா (ரலி), அம்மார் (ரலி), சுமைய்யா (ரலி), ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி), மிக்தாம் (ரலி), ஆதாரம்: புகாரீ, அஹ்மத் 18478இ இப்னுமாஜா 147, பத்ஹுல் பாரீ)
கேள்வி: ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு இணை வைப்பவர்கள் என்ன வேதனை கொடுத்தனர்?
பதில்: இரும்புச் சட்டைகள் அணிவித்து வெயிலில் வாட்டினார்கள். (ஆதாரம்: இப்னுமாஜா 147)
கேள்வி: பிலால் (ரலி) அவர்களுக்கு இணை வைப்பாளர்கள் என்ன தண்டனை கொடுத்தார்கள்?
பதில்: சிறுவர்களிடம் பிலால் (ரலி) அவர்களை கொடுத்து மக்கா வீதிகளில் இழுத்துச் செல்லுமாறு கூறினார்கள். அப்போதும் அல்லாஹ் ஒருவனே என்று கூறிக் கொண்டிருந்தார்கள் பிலால் (ரலி). (ஆதாரம்: இப்னுமாஜா147)
கேள்வி: (முஹம்மதே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! என்ற (26:214) வசனம் இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள் குறிப்பாக யாரிடம் போய் ஓரிறைக் கொள்கையைக் கூறினார்கள்?
பதில்: தமது சிறிய தந்தை அப்பாஸ் (ரலி), மாமி ஸபிய்யா (ரலி), மகள் பாத்திமா (ரலி), (ஆதாரம்: புகாரீ 2753)
கேள்வி: அவர்களிடம் என்ன கூறினார்கள்?
பதில்: உங்களை அல்லாஹ் விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்! நான் உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து எதையும் வாங்கித் தர முடியாது (தண்டையிலிருந்து காப்பாற்ற முடியாது) என் செல்வத்திலிருந்து நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் (நான் அதைத் தருகிறேன்) என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரீ 3527)
கேள்வி: நபி (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச் சொன்ன போது முஷ்ரிக்கள் என்ன செய்தார்கள்?
பதில்: நபிகளாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களிடம் சென்று நபிகளாரின் செயல்பாட்டை நிறுத்தச் செய்யுமாறு கோரினார்கள். (ஆதாரம்: முஸ்னத் அபூயஃலா 6804)
கேள்வி: அப்போது அபூதாலிப் என்ன செய்தார்கள்?
பதில்: நபி (ஸல்) அவர்களை அழைத்து வர கட்டளையிட்டார்கள். அவர்கள் வந்த போது முஷ்ரிக்குகளின் கோரிக்கை பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மேலே உள்ள சூரியனைச் சுட்டிக் காட்டி அதன் ஜுவாலையால் என்னைச் சுட்டாலும் நான் என் பணியை நிறுத்த மாட்டேன் என்றார்கள். (ஆதாரம்: முஸ்னத் அபூயஃலா 6804)
+ கருத்துகள் + 2 கருத்துகள்
Nabi sallallahu alahi vasalam ,40 vaythuku mun ,avargaludaya valipadudal eppadi irunthathu.
முதல் வசனத்தை எவ்வாறு அலங்கரிக்கப்பட்டது
கருத்துரையிடுக