அந்த நாள் அருகிலேயே உள்ளது:

அந்த நாள் அருகிலேயே உள்ளது:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM3aMtzwtXdiddHzww-RlPiIuyhN8GTMlAXX-e-ZPb6ZGuSVw99bgwv9-meqyv_O0HlH_gRcc_YRrGa7UPLnu0LfUT1zdAIJVlUdLU9TSb9S3gQctSLBhztqimg5if33ss0ZYkbLVMqn4/s72-c/24_5701_2%5B1%5D.1.JPG



அந்த நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டாலும் சீக்கிரமே அந்த நாள் வந்து விடும் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது.

சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான்.

(திருக்குர்ஆன் 78:40)

அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.

(திருக்குர்ஆன் 70:6,7)

அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது.

(திருக்குர்ஆன் 54:1)

அந்த நேரம் அருகில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?

(திருக்குர்ஆன் 42:17)

(முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' எனக் கூறுவீராக! அந்த நேரம் சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?

(திருக்குர்ஆன் 33:63)

உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. அப்போது (ஏக இறைவனை) மறுத்தோரின் பார்வைகள் நிலை குத்தியதாக இருக்கும். 'எங்களுக்குக் கேடு தான். நாங்கள் இது பற்றிக் கவனமற்று இருந்து விட்டோம். இல்லை நாங்கள் அநீதி இழைத்தோம்'' (என்று கூறுவார்கள்).

(திருக்குர்ஆன் 21:97)

மனிதர்களுக்கு அவர்களின் விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ புறக்கணித்து,கவனமின்றி உள்ளனர்.

(திருக்குர்ஆன் 21:1)

'எங்களை எவன் மீண்டும் படைப்பான்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். 'முதல் தடவை யார் உங்களைப் படைத்தான்?'' என்று கேட்பீராக! உம்மிடம் தங்கள் தலைகளைச் சாய்த்து, 'அது எப்போது வரும்?'' என்று கேட்கின்றனர். 'அது சமீபத்தில் வரக் கூடும்'' என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன் 17:51)

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும், அவன் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களின் காலக்கெடு அருகில் இருக்கக் கூடும் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா? இதன் பிறகு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்பப் போகிறார்கள்?

(திருக்குர்ஆன் 7:185)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டி 'நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),

நூல்: புகாரி 4936, 5301, 6503

அந்த நாள் மிகவும் சமீபத்தில் வந்து விடும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ் அறிவித்த பின் இன்னும் அந்த நாள் வரவில்லையே என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வுலகம் படைக்கப்பட்டு இலட்சோப லட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்து விட்ட இலட்சோப லட்சம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 1400 ஆண்டுகள் என்பது மிகவும் அற்பம் தான். இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து மறுமை நாள் வந்தாலும் 'அது சமீபத்தில் தான் உள்ளது'' என்ற அறிவிப்புக்கு அது முரணாக அமையாது.
Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger