இறைவனுக்கு உருவம் உண்டா?

இறைவனுக்கு உருவம் உண்டா?

        
                 இந்த தலைப்பின் கீழ் பல் வேறு குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் டிகொடுத்திருக்கிறோம். யாருடைய விளக்கமும் தேவைப்படாத அளவுக்கு இந்த செய்திகள் அமைந்துள்ளன. எனவே மொழிபெயர்ப்பை மட்டும் கொடுத்திருக்கிறோம்.


            கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தா செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.
அல் குர்ஆன் 68 : 42.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
அல் குர்ஆன் 75 : 22

”அல்லாஹ்வின் கை கட்டப் பட்டுள்ளது” என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன.
அல் குர்ஆன் 5 : 64.

”(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர வேறு யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப் படாதீர்! நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது
அல் குர்ஆன் 11 : 37.

(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களி­ருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
அல் குர்ஆன் 42 : 11.

அபூசயீத்  அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாüல் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?” என்று ளநபி (ஸல்) அவர்கüடம்ன கேட்டோம். அதற்கு அவர்கள், ”(மேகமூட்டமில்லாது) வானம் தெüவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியத்துக்கொண்டு) சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள், ”இல்லை” என்று பதிலüத்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாüல் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) விளக்கினார்கள்:
(மறுமை நாüல்) அழைப்பாளர் ஒருவர், ”ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று அழைப்புவிடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தமது கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக்(கொண்டு நன்மை களும் புரிந்து) கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்கüல் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்கüடம், ”நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ”நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம்” என்று பதிலüப்பார்கள். அப்போது அவர்கüடம், ”நீங்கள் பொய்யு ரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை” என்று சொல்லப் படும். பிறகு அவர்கüடம், ”இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கவர்கள், ”எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!” என்பார்கள். அப்போது (அவர்கüடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு), ”குடியுங்கள்” என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போது) அவர்கள் நரகத்தில் விழுந்துவிடுவார்கள். பின்னர் கிறிஸ்தவர்கüடம், ”நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ”அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்” என்று பதிலüப்பார்கள். அப்போது அவர்கüடம், ”நீங்கள் பொய்யுரைக் கிறீர்கள்; அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை” என்று கூறப்பட்ட பின் ”நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ”நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று பதிலüப்பார்கள். அப்போது அவர்கüடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) ”குடியுங்கள்!” என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள்.
இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டி ருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக்கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்கüடம் ”மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றுவிட் டார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ”(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக)  இந்த மக்கüடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந் தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர் ”ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகவாழ்வில்) தாம் வணங்கிக்கொண்டிருந்த வர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வணங்கிக் கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுவார்கள். அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணிவைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்கüடம் முதல் தடவையாக வந்து, ”நானே உங்கள் இறைவன்” என்று கூறுவான். அதற்கு இறைநம்பிக்கை யாளர்கள், ”நீயே எங்கள் இறைவன்” என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, ”அவனை இனங் கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்கு மிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?” என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், ”(இறைவனின்) கால் (பாதம்)தான்” என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தனது காலை வெüப்படுத்துவான். இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு  சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்கüன் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர் களால் சிர வணக்கம் செய்ய முடியாது).78
பிறகு பாலம் கொண்டுவரப்பட்டு, நரகத்தின் மேலே வைக்கப்படும். ளஇவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது,ன நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! அது என்ன பாலம்?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ”அது (கால்கள்) வழுக்குமிடம்;  சறுக்குமிடம்; அதன் மீது இரும்புக் கொக்கி களும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்திருக்கும். ‘நஜ்த்’ பகுதியில் முளைக்கும் அவை ‘கருவேல மர முற்கள்’ எனப்படும்” என்று சொன்னார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) இறைநம்பிக்கை யாளர் அந்தப் பாலத்தை கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்துவிடுவார். எந்தக் காயமுமின்றி தப்பிவிடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்கüல் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார். பின்னர், தாம் தப்பித்துவிட்டோம் என்பதை இறைநம்பிக்கை யாளர்கள் காணும்போது தம் சகோதரர் களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்குத் தெüவாகிவிட்ட உரிமைக்காகக் கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டி ருக்கமாட்டீர்கள். அப்போது அவர்கள், ”எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுதுகொண்டிருந்தார்கள்;  எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; எங்களுடன் (மற்ற) நல்லறங்கள் புரிந்துகொண்டிருந்தார்கள் (எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக)” என்று வேண்டுவார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ”நீங்கள் சென்று, எவருடைய உள்ளத்தில் ஒரு பொற்காசு (தீனார்) அளவுக்கு இறைநம்பிக்கை இருக்கக் காண்கின்றீர்களோ அவர்களை (நரகத்திலிருந்து) வெüயேற்றுங்கள்” என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (நரகவாசிகüடம்) செல்வார்கள். அவர்கüன் முகங்களைக் கரிக்கக் கூடாதென நரகத்திற்கு அல்லாஹ் தடை விதித்துவிடுவான். அப்போது (அந்த நரகவாசிகüல்) சிலர் தமது பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு, பாதி கால்கள் மறையும் அளவிற்கு நரகினுள் கிடப்பார்கள். உடனே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகத்திலிருந்து) வெüயேற்றுவார்கள். பிறகு மீண்டும் (இறைவனிடம்) செல்வார்கள். ”எவரது உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறை நம்பிக்கை உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களையும் வெüயேற்றுங்கள்” என்பான். அவ்வாறே அவர்கள் தமக்குத் தெரிந்தவர் களை வெüயேற்றிவிட்டு மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், ”எவரது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ அவர்களையும் (நரகத்திலிருந்து) வெüயேற் றுங்கள்” என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர் களை (அதிலிருந்து) வெüயேற்றுவார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூசயீத்
(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதை) நீங்கள் நம்பாவிட்டால், ”திண்ண மாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவுகூட அநீதி இழைக்கமாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதை இரட்டிப் பாக்குவான்” எனும் (4:40ஆவது) இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
இவ்வாறு இறைத்தூதர்கள், வானவர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகியோர் (தத்தமது தகுதிக்கேற்ப) பரிந்துரை செய்வார்கள். அப்போது சர்வ அதிகாரம் படைத்த (இறை)வன் ”(இனி) என் பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கிறது” என்று கூறிவிட்டு, நரகத்தி லிருந்து ஒரு கைப்பிடி அளவு மக்களை அள்üயெடுத்து அவர்களை வெüயேற்று வான். அவர்கள் கரிந்துபோயிருப்பார்கள். ஆகவே, சொர்க்க வாசலிலுள்ள ஒரு நதியில் அவர்கள் போடப்படுவார்கள் அதற்கு ‘ஜீவ நீர்’ (‘மாஉல் ஹயாத்’) என்று பெயர். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று நதியின் இரு மருங்கி லும் முளைத்து (நிறம் மாறி)விடுவார்கள். பாறையின் ஓரத்திலும் மரத்தின் ஓரத்திலும் இந்தப் பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் வெயில் பக்கமாக இருப்பது பச்சையாகவும, நிழல் பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும்.
ஆக, அவர்கள் (அந்த நதியிலிருந்து) வெüயேறும்போது முத்தைப் போன்று (புதுப் பொரிவுடன்) வெüயேறுவார்கள். அவர்களது கழுத்தில் (நரகத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் என்பதற்கான) முத்திரை பதிக்கப்படும். பிறகு அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைவார்கள். அப்போது சொர்க்கவாசிகள் (இவர்களைப் பார்த்து), ”இவர்கள் பேரருளாளனால் விடுதலை செய்யப்பட்டவர்கள்; இவர்கள் எந்த நற்செயலும் புரியாமல், எந்த நன்மையும் ஏற்கெனவே செய்திராமல் அவனே இவர்களைச் சொர்க்கத்தினுள் பிரவேசிக்கச் செய்தான்” என்று கூறுவர். பிறகு (அவர் கüடம்) நீங்கள் காண்கிறீர்களே  இதுவும் உங்களுக்கு உண்டு; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு” என்று (நற்செய்தி) சொல்லப்படும்.
நூல் புகாரி : 7439.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமைநாüல் இறைநம்பிக்கையாளர்கள் கவலைப்படும் அளவுக்கு நிறுத்திவைக்கப் படுவார்கள். அப்போது அவர்கள், ”(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும் படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் என்ன?” என்று பேசிக்கொள்வார்கள். பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்கüடம் சென்று, ”நீங்கள் மனிதர்கüன் தந்தை ஆதம் ஆவீர்; அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான்;  தனது சொர்க்கத்தில் உங்களை குடியிருக்கச் செய்தான்; தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான்;  எல்லாப் பொருட்கüன் பெயர் களையும் உங்களுக்கு அவன் கற்பித்தான். (எனவே,) இந்த(ச் சோதனையான) கட்டத்தி லிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்கள் இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்” என்று கோருவர். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ”(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறிவிட்டு, உண்ணக் கூடாதெனத் தடை விதிக்கப் பட்டிருந்த மரத்திலிருந்து புசித்துவிட்டதால் தாம் புரிந்த தவற்றினை அவர்கள் எடுத்துக் கூறுவார்கள். ”(எனக்குப் பின்) பூமியிலுள்ள வர்களுக்கு  இறைவனால் நியமிக்கப்பட்ட (முக்கியமான) இறைத்தூதர்கüல் முதலா மவரான நூஹ் (அலை) அவர்கüடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
நூல் புகாரி 7440.

உடனே இறைநம்பிக்கையாளர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான்
என் இறைவனை அவனது இல்ல(மான சொர்க்க)த்தில் சந்திக்க அனுமதி கோருவேன். எனக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். நான் என் இறைவனைக் காணும்போது  சஜ்தாவில் விழுந்துவிடுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் என்னை (அப்படியே) விட்டுவிடுவான். பிறகு அவன், ”எழுங்கள், முஹம்மதே! சொல்லுங்கள்;  செவியேற்கப் படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும். கேளுங்கள்;  உங்களுக்குத் தரப்படும்” என்று கூறுவான். அப்போது நான் எனது தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி என் இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பின்னர் நான் (அவனது இல்லத்திலிருந்து) வெüயேறி அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். லிகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ”பின்னர் நான் (அவனது இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று (நரகத்திலிருந்து) அவர்களை வெüயேற்றி, சொர்க்கத்திற்குள் அனுப்பி வைப்பேன்” என்றும் அனஸ் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்.
நூல் புகாரி 7440.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கüல் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமைநாüல் தனித் தனியாகப்) பேசாமலிருக்கமாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாள ரும் இருக்கமாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது.
இதை அதீ பின் ஹாத்திம் (ரரி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் புகாரி 7443.

அல்லாஹ் மறுமைநாüல் மூன்று பேரிடம் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்.
ஒருவர் (தமது) விற்பனைப் பொருளுக்கு (அதைக் கொள்முதல் செய்தபோது உண்மையில்) தாம் கொடுத்த விலையைவிட அதிக விலை கொடுத்ததாகப் பொய்ச்  சத்தியம் செய்கிறார். மற்றொருவர், ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிப்பதற்காக அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் ஒன்றுகூடும் நேரத்தில்) பொய்ச் சத்தியம் செய்கிறார். வேறொருவர், தமது தேவைக்குப் போக மிஞ்சிய தண்ணீரை (வழிப்போக்க ருக்குத் தராமல்) தடுக்கின்றார். (அவரிடம்) அல்லாஹ் மறுமைநாüல் ”நீ தேடிச் சம்பாதிக்காத பொருளை (லிநீரை) நீ தர மறுத்ததைப் போன்று இன்று என் அருளை உனக்கு வழங்க மறுக்கிறேன்” என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் புகாரி 7446.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதப் பாதிரியார் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் வந்து, ”முஹம்மதே! மறுமைநாüல் அல்லாஹ் வானத்தை ஒரு விரரிலும் பூமியை ஒரு விரரிலும் மலைகளை ஒரு விரரிலும் மரத்தை ஒரு விரரிலும் நதிகளை ஒரு விரரிலும் இதர படைப்புகள் அனைத்தையும் ஒரு விரரிலும் (நிறுத்தி) வைத்துக்கொண்டு தனது கரத்தால் (சைகை செய்தவாறு) ‘நானே அரசன்’ எனக் கூறுவான்” என்று சொன்னார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்து விட்டு, ”அவர்கள் (யூதர்கள்) அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை” எனும் (6:91ஆவது) வசனத்தைக் கூறினார்கள்.
நூல் புகாரி 7451.
Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger