மக்களைக் காக்கும் கடவுள் அவதாரங்கள்!
கடவுளில் தான் எத்தனை எத்னை வகைகளை ரகம் ரகமாக வகைப்படுத்தியள்ளனர். ஊருக்கொரு கடவுள்! ஆளுக்கொரு கடவுள் என்ற நிலை வந்து விட்டது. இவைகள் என்ன என்று பாருங்கள்.
முருகன் துணை ! அம்மன் துணை! அனுமான் துணை! பராசக்தி துணை! என்ற நம்பிக்கை வாசகங்கள் இந்துக்களிடம் பரவலாகக் காணலாம். இதைக்காப்பியடித்த முஸ்லிம் பெயர் தாங்கிகள் தங்களுக்கும் இப்படிப்பட்ட கடவுள் அவதாரத் துணைகள் தேவைப்படுகின்றன என்று கருதி அவர்களும் இதுபோன்ற வாசகங்களை எழுதிவைத்திருக்கும் வேதனையைப் பாருங்கள்.
முகைதீன் ஆண்டவர் துணை!
காதர் அவ்லியா துணை!
யா கவுஸ் துணை!
ஷhஹுல் ஹமீது நாயகம் துணை!
செய்யிதலி பாத்திமா துணை!
சிக்கந்தர் அவ்லியா துணை!
ஏர்வாடி அவ்லியா துணை!
பீரான்மலை அவ்லியா துணை!
பாதுஷh நாயகம் துணை!
நாகூர் ஆண்டவர் துணை!
சுல்தான் அலாவுத்தீன் அவ்வியா துணை!
நத்கர் ஒலியுல்லாஹ் துணை!
பாசிப்பட்டணம் அவ்லியா துணை!
பீமா அம்மாள் துணை!
முஸாபர் அவ்லியா துணை!
இவையெல்லாம் என்ன தெரியுமா? மதுரையிலுள்ள ரிக்சாக்கள், லாரிகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள்.
இப்படியெல்லாம் இறைவனது படைப்புகளிடம் துணை தேடலாமா? உதவி தேடலாமா ? இஸ்லாம் இதை அனுமதிக்கிறதா? இவையெல்லாம் ‘ இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கும் கொடிய ‘ஷிர்க்’ என்னும் மிகப்பெரிய பாவமாகும். இதற்கு மன்னிப்பே கிடையாது. நிரந்தர நரகமே இதற்குரிய தண்டனையாகும். சுவர்க்கம் ஹராமாகிவிடும்.’ என்பதை வான்மறை அல் குர்ஆன் (4:48,5:72,46:5,31:13, 26:213) வசனங்கள் எச்சரிக்கின்றன.
இறைமறை அல்குர்ஆன் கூறுகிறது....
1.அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள் 72:18,
2.அல்லாஹ்வைத்தவிர்த்து நன்மையோ தீமையோ செய்ய முடியாதவற்றை அழைக்காதீர்கள 40:14,
நீங்கள் உங்கள் தேவைகளுக்காக என்னையே அழையுங்கள். நான் உங்களு(டைய பிரார்த்தனைகளு)க்குப் பதிலளிப்பேன் 40:60,
3.உதவி என்பது வல்லமையும் ஞானமுடையோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிரவேறு (எவரிடமிருந்தும்)இல்லை 3:26,
4.உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.உன்னிடமே உதவி தேடுகிறோம் 1:5
என்ற இறைமறை வசனங்களும் ‘உதவி வேண்டுமாயின் அல்லாஹ்விடமே கேட்டுப் பெறுங்கள்’ (திர்மிதி) போன்ற நபிமொழிகளும்
மனிதனின் எவ்வகை தேவையானாலும், எவ்வகை உதவியானாலும் இறைவனிடமே கேட்கவேண்டும். அவனைத்தவிர வேறு எவரிடமும் உதவியை தேடவே கூடாது. அவ்வாறு கேட்டால் அவன் இறைவனுக்கு இணைவைத்த பாவியாகி விடுவான். இறைவனே அனைத்துக்கும் துணை புரிபவன் என்பது முஸ்லிம்களின் அசைக்க முடியாத ஈமானிய நம்பிக்கையாகும். இன்று இந்த நம்பிக்கையிலிருந்து தடம் புரண்டு முஸ்லிம்கள் எங்கோ சென்றுவிட்டார்கள். யார் யாரிடமோ உதவி தேடுகிறார்கள். இறைவன் நம்மைக் காப்பானாக! நவூதுபில்லாஹ்.
கருத்துரையிடுக