ஆடைகளைப் போன்றவர்கள்
____________________________
அருள் மறையாம் திருமறை கணவன்-மனைவி உறவு குறித்து பேசும் போது ஒருவர் மற்றொருவருக்கு ஆடையை போன்றவர்கள் என்று குறிப்பிடுகிறது.
ஆடை ஒருவரின் குறைகளை மறைத்து அவரை சமுதாயத்திற்கு எவ்வாறு கண்ணியமாக காட்டுகிறதோ அதே போன்று கணவன்-மனைவி இருவரும் அவரவர் குறைகளை மறைத்து சமுதாயத்திற்கு முன் கண்ணியமாக தங்களை அடையாள படுத்தி கொள்ள வேண்டும் என்று குர் ஆன் கூறுகிறது...
இஸ்லாமியர்கள் குர் ஆனை தெளிவாக உணர்ந்து செயல் படாததால் தான்,இன்று நம் சமுதாய மக்கள் விவாகரத்து கேட்டு ஜமாத்திடமும்,அங்கு முடியவில்லை என்றால் கோர்ட் வரையிலும் செல்கிறது....
உலக மக்கள் அனைவரும் பின் பற்ற கூடிய எளிய மார்க்கம் இஸ்லாம்,
அழகிய வேதம் குர் ஆன்
அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (அல் - குர்ஆன் 2:187).
கருத்துரையிடுக