தலைபோகிற விஷயம்...! முதலில் இதைப் படியுங்கள்...!

தலைபோகிற விஷயம்...! முதலில் இதைப் படியுங்கள்...!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS81_8N2Py3oi0a66B-MxPJjKwmvIfiHSGR1W5VK3vM_FKxEMVXMeh8HCGXgkWBzUStl-qbHntNR861hIxKz0UIqdxezXFuVpfyNX0rDdD0dFVbR4tMWSTDhh9eC3RGBi0RU1D-rF9lNg/s72-c/Kadhal+Jodi+Photo.jpg
பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஜூலை (13) - 2011 கெஜட்டை (Part VI - Section4) அண்மையில் பார்க்க நேர்ந்தது. இதில் பெயர் மாற்றங்கள் மட்டுமன்றிமதமாற்றங்கள் பற்றிய அறிவிப்பும் காணப்படுகிறது.

ஜூலை (13) - 2011 இதழில் பெயர் மாற்றம் செய்துகொண்டோர் சுமார் 1330 பேர். இவர்களில் மதம் மாறியோர் 106 பேர். அதன் சுருக்க விவரம் வருமாறு:
  • இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியோர் 38 பேர். இது மதம் மாறியோர் எண்ணிக்கையில் 35.84 விழுக்காடு ஆகும்.
  • இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 31 பேர். இது    மொத்தத்தில் 29.24விழுக்காடு ஆகும்.
  • இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறியோர் 5 பேர். இது 4.71 விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியோர் 18 பேர். இது 16.98 விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 3 பேர். இது 2.83 விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து புத்த மதம் சென்றோர் 2 பேர். இது 1.88 விழுக்காடு.
  •  இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்கள் 8 பேர். இது மொத்தத்தில் 7.54விழுக்காடு.
  • இஸ்லாத்திலிருந்து கிறித்தவம் சென்றவர் ஒருவர். இது 0.94 விழுக்காடு.

மதம் மாறிய முஸ்லிம்கள்:
வ. எண்
பழைய பெயர்
புதிய பெயர்
தந்தை / கணவன் பெயர்
வயது
ஊர்
மாறிச் சென்ற மதம்
1
அஃப்ரோஸ்
நிவேதிதா
த /பெ. நேரு
4
கோவை
இந்து
2
ஷரஃபுந் நிசா
பிரியா
க/பெ. நேரு
33
கோவை
இந்து
3
தானிஸ்தா பேகம்
கீர்த்தினா
த/பெ. ஹைதர் ஷரீப்
28
சென்னை
இந்து
4
ஜமால் மைதீன்
பிரதீஷ்
த/பெ. சலாஹுத்தீன்
23
சென்னை
இந்து
5
முஸஃப்பர்
ரகு
த/பெ. யாசீன்
37
சென்னை
இந்து
6
மக்பூல் ஜான் (பெண்)
ஐஸ்வர்யா
க/பெ. சுந்தர்
34
சென்னை
இந்து
7
அப்துல் மஜீத்
மகேஷ்
த/பெ. நயினார்
40
சென்னை
இந்து
8
ஷேக் உஸ்மான்
பாலகிருஷ்ணன்
த/பெ. சிவன்
32
சென்னை
இந்து
9
மும்தாஜ் பேகம்
மும்தாஜ் பேகம்
த/பெ. ஷானு
24
சென்னை
கிறித்தவம்

இவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள்இருவர் வேறு மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறிபின்னர் மதம் மாறியவர்கள் என்று தெரிகிறது.

இன்னொரு விவரம்: மதம் மாறிய இந்த 106 பேரில் இந்து மதத்திலிருந்து விலகியோர் 74 பேர்அதே நேரத்தில்இந்து மதத்திற்கு திரும்பியோர் அல்லது புதிதாகச் சேர்ந்தோர் 26 பேர். மீதி 48 பேர் இந்து மதத்தைத் துறந்துள்ளனர்.

கிறித்தவத்திலிருந்து வேறு மதம் சென்றவர்கள் மொத்தம் 23 பேர். வேறு மதங்களிலிருந்து கிறித்தவத்திற்கு வந்தோர் 39 பேர். ஆக, 16 பேர் அதிகமாகியுள்ளனர்.

இஸ்லாத்திலிருந்து வேறு மதம் மாறியோர் 9 பேர். புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோர் 34 பேர். ஆக, 25 பேர் அதிகமாகியுள்ளனர்.

ஏன் மாறினர்?
இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கும் கிறித்தவ மதத்திற்கும் சென்ற அந்த 9 பேர் ஏன் சென்றனர்?அவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்களாயிற்றே! காரணம் என்னபெற்றோர்களும் சமுதாயமும் தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய விஷயமல்லவா இதுஅதிகாரபூர்வமாக அரசிதழின் ஒரு வெளியீட்டில் தெரிந்த எண்ணிக்கைதான் இது. வெளியுலகுக்குத் தெரியாமல் நடக்கின்ற மாற்றங்கள் எத்தனையோ!

பெரும்பாலும் இந்த மாற்றங்களுக்குக் காரணம் காதல் வலையில் சமுதாய இளவல்கள் சிக்கித் தவிப்பதுதான். கல்லூரிகள்விடுதிகள்அலுவலகங்கள் ஆகிய ஆண் - பெண் கலப்புள்ள இடங்களில் நம் பிள்ளைகளும் சுதந்திரமாகப் பழகிவருகின்றனர். இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டுகாதல் என்ற பெயரில் எல்லாவற்றையும் இழக்கத் துணிந்துவிடுகின்றனர். இது ஒரு வரட்டுத் துணிச்சல் என்பது திருமணத்திற்குப் பின்போகற்பை இழந்ததற்குப் பின்போதான் அந்த இளசுகளுக்குத் தெரிகிறது. அதற்குள் காரியம் கைமீறிப்போயிருக்கும்.

பெற்றவர்கள்உடன்பிறந்தவர்கள்உறவினர்கள்சமுதாயம்ஏன் விலைமதிக்க முடியாத ஈமானையே தூக்கியெறியத் துணியும் இன்றைய இளவல்கள் யாரைப் பற்றியும்எதைப் பற்றியும் யோசிக்கத் தயாராயில்லை. காதல் மயக்கம்அதில் கிடைக்கும் தாற்காலிக சுகம்சிறகடித்துப் பறக்கும் பக்குவமில்லாத பருவம்நண்பர்கள் தரும் ஊக்கம்சினிமாத்தனமான ஹீரோயிஸம்... எல்லாம் சேர்ந்து எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகின்றன.

பெற்ற தாயும் தந்தையும் புத்திர சோகத்தால் அழுது புலம்பிவெளியே தலைகாட்ட முடியாமல் கூனிக் குறுகிஅணுஅணுவாகச் செத்துக்கொண்டிருப்பதோஉற்றார் உறவினர் பரிதவிப்பதோசமுதாயத்திற்கு ஏற்படும் தலைகுனிவோ எதுவும் காதல் போதையில் இருக்கும் அவர்களின் கண்களில் படுவதில்லை. குறைந்தபட்சம்தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இதே பாணியைக் கையாண்டால்தங்கள் நிலைமை என்னவாகும் என்பதைக்கூட இந்த விடலைகள் எண்ணிப்பார்ப்பதில்லை.

இதையெல்லாம் காதலுக்குச் செய்யும் தியாகம்‘ என இவர்கள் சினிமா வசனம் பேசுகிறார்கள். சினிமா,நடைமுறைக்கு ஒத்துவராது என்பதும் இவர்களுக்கு உறைப்பதில்லை. மூன்று மணிநேர பொழுதுபோக்குக்காகஎதார்த்தங்களுக்கு எதிரான கற்பனைகளைக் கலந்து இளசுகளை நாசமாக்கிக்கொண்டிருக்கும் திரையுலகத்தினருக்குச் சிறிதளவேனும் மனசாட்சியும் சமூக அக்கறையும் இருக்க வேண்டும். பணம் மட்டுமே கோலோச்சும் அந்த உலகில் குணத்தை எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்.

அடிப்படை கோளாறு
பெற்றோர்கள்தம் பிள்ளைகளைக் கஷ்டமே தெரியாமல் செல்லமாக வளர்க்கிறார்கள்கடன் பட்டாவது படிக்கவைக்கிறார்கள்மக்களின் மனம் நோகாதுகேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்;கொஞ்சம் வளர்ந்தவுடன் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கிறார்கள்.

ஆனால்பாலுக்கும் பாய்ஷனுக்கும் வித்தியாசம் சொல்லி வளர்த்தவர்கள்பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் வித்தியாசம் சொல்லி வளர்க்கவில்லையே! மார்க்கத்தின் அறநெறிகளைச் சொல்லி வளர்க்க வேண்டிய அவர்கள்மேலை நாட்டு நாகரிக்கத்தையல்லவா புகட்டுகிறார்கள்!

இதனால்நம் இளைய தலைமுறையினரிடம் வெட்கம்மானம்ஒழுக்கம் ஆகிய மாண்புகள் எல்லாம் கேலிப்பொருட்களாகத் தெரிகின்ற பரிதாப நிலைதான் காணப்படுகிறது. தொழுகைதிக்ர்நோன்பு,நல்லுரைகள் கேட்பதுநல்ல பழக்கவழக்கங்கள்நபிவழிநல்ல நண்பர்களுடனான பழக்கம் - இவற்றையெல்லாம் சொல்லி வளர்க்காத வரை உங்கள் மக்கள் செல்வம் உங்களுக்குச் சொந்தமில்லை.

மதமாற்றத்திற்கு வறுமையும் ஒரு காரணம்தான். வறுமையால் ஈமானையே இழக்கத் துணிகின்ற ஒருவரிடம்அந்த ஈமான் ஆழமாகப் பதியவில்லை என்பதுதான் பொருள். இதற்கும் பெற்றோரே காரணம்! சிறுவயதிலேயே இஸ்லாத்தைக் கற்பிக்க வேண்டும்! ஈமானின் அவசியத்தை உணர்த்த வேண்டும்! மறுமையைப் பற்றிய சிந்தனையை ஊட்ட வேண்டும்!

அத்துடன்வறுமைக் கோட்டிற்குக் கீழே மூச்சுவிட முடியாமல் திணறும் குடும்பங்களைக் கண்டறிந்து,அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற மஹல்லா ஜமாஅத்கள்இஸ்லாமிய அமைப்புகள்,இளைஞர் மன்றங்கள் பாடுபட வேண்டும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம் பிள்ளை தானே வளரும்! இறைவன் வளர்ப்பான்!

ஆகஇஸ்லாத்தைத் துறப்பதென்பது சமுதாயத்தின் அழிவுக்கு அடிகோலும்கலாசாரச் சிதைவுக்கு வழிகோலும்நம் இருப்பையே கேள்விக் குறியாக்கிவிடும்! சம்பந்தப்பட்ட அனைவரும் இதன் தீவிரத்தை உணர்ந்துஉடனடியாகச் செயல்பட முன்வர வேண்டும்!

தமிழ்நாடு அரசிதழில் வெளியான பெயர்கள் விவரம்
Gazette

THURSDAY, JULY 14, 2011


என்ன செய்யப்போகிறோம்...?

பையன் பல்லாவரம். பெண் பெசண்ட் நகர். வசதியான குடும்பத்துப் பெண். இருவரும் முஸ்லிம்கள். படிக்கும்போது முகிழ்த்த நட்பு காதலாகத் துளிர்த்தது. பெண் வீட்டாரிடம் இருவரும் தம் காதல் குறித்துத் தெரிவித்துத் திருமணத்திற்காக ஏங்கியுள்ளனர்.

ஏற்கெனவே மாப்பிள்ளை பேசி முடிவாகிவிட்டது; இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை என்று பெண் வீட்டார் கதவை அழுத்தமாகச் சாத்திவிட்டனர். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் பெரிய இடத்துப் பெண்ணின் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது. இப்போது அவள் ஐந்து மாத கர்ப்பிணி.

இந்நிலையில், அப்பெண் தன் பழைய காதலனுடன் பெங்களூர் ஓடிவிட்டாள். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கிக்கொண்டு, "நாங்கள் சேர்ந்துவாழ விரும்புகிறோம். பிரித்தால் தற்கொலை செய்து கொள்வோம்'' என்று பையனும் பெண்ணும் மிரட்டல் விடுக்கிறார்கள்.

என்ன செய்யப்போகிறோம்...?

பெண் படித்துக்கொண்டிருந்தபோது டியூஷன் சென்டர் போவது வழக்கம் -இதுவும் சென்னையில்தான்- அங்கு டியூஷன் எடுத்த ஆசிரியர் இந்து. மாணவி முஸ்லிம். இருவருக்கும் இடையே ஆசிரியர் - மாணவி என்ற உறவுக்கு மேலே காதல் தலைதூக்கியது.

பெண்ணின் வீட்டாருக்கு விவரம் தெரியுமோ தெரியாதோ, ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கு மணமுடித்து வைத்துவிட்டனர். மாப்பிள்ளை முஸ்லிம். சேர்ந்துவாழ்ந்தனர். அடையாளமாக வயிற்றில் ஏழு மாதக் குழந்தை.

இந்நிலையில் திடீரெனப் பெண் காணாமல் போய்விட்டாள். பிறகுதான் தெரிந்தது, அவள் தன் பழைய காதலனுடன் எங்கேயோ சுற்றித் திரிகிறாள் என்று. பின்னர் வீடு திரும்பிய அவளை, விவாகரத்துச் செய்துவிட வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். கணவனோ, மனைவியை மன்னித்து ஏற்கத் தயார்.

என்ன செய்யப்போகிறோம்...?

பிராமணப் பெண். பையன் முஸ்லிம். தேனி மாவட்டம். கல்லூரியில் உருவான காதல், இரு வரையும் கண்காணாத இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. இருவரும் இப்போது சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். எங்கே, எப்படி, திருமணம் ஆனதா, இல்லையா எதுவும் பையன் வீட்டாருக்குத் தெரியாது.

கிட்டத்தட்ட இதே பாத்திரம், வேலூர் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில்.

என்ன செய்யப்போகிறோம்...?

இப்படி ஒன்றல்ல; இரண்டல்ல. பல நூறு சம்பவங்கள். நகரம், கிராமம் என்ற வித்தியாசமில்லாமல் நம் குடும்பங்களில் அரங்கேறிவருகின்றன. மேலைநாட்டுக் கலாசாரம், சின்னத்திரை, வண்ணத்திரை என்றெல்லாம் காரணங்களைச் சொல்லிவிட்டால் போதுமா? மலைப் பாம்பாய் வாய் பிளந்து மிரட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பேராபத்தைச் சமுதாயம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது? இந்த வைரஸுக்கு வைத்தியம் என்ன?

பெண் கல்வி

முஸ்லிம் பெண்கள் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்; பிரச்சினைகளைத் துணிவோடு எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் என்பதற்காகப் பெண் கல்வியை அனைவரும் வலியுறுத்துகிறோம். அது உண்மையும்கூட.

இப்போதெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமன்றி, முஸ்லிம் ஊர்களிலும்கூட சமுதாயக் கண் மணிகள் நிறையவே படிக்கின்றனர். உயர்கல்வியில் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டனர். இளநிலைப் பட்டப் படிப்புக்கும் மேலாக, உயர்நிலைப் பட்டப்படிப்பிலும் முஸ்லிம் மாணவிகள் ரேங்க் ஹோல்டர்களாக ஜொலிக்கின்றனர். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், கல்வி ஒரு பக்கம் வளர்ந்தால், மறுபக்கம் கலாசாரச் சீரழிவு தேள் போல் கொட்டுகிறதே! முன்பு நம் இல்லங்களை அலங்கரித்த ஒழுக்கம், நாணம், அடக்கம் ஆகிய உயர் பண்பாடு களெல்லாம் சிறிது சிறிதாக மலையேறத் தொடங்கிவிட்டனவே!

நாம் என்ன செய்யப்போகிறோம்?

இதற்காகப் பெண் கல்வியை ஓர் எல்லைக்குள் முடக்கிவிட முடியுமா? அப்படியானால், நம் வீட்டு ஆண் பிள்ளைகளும்கூட மாற்றார் தோட்டத்து மான்களுக்குப் பின்னால் ஓடிப்போய் விடுகிறார்களே! ஆண்களும் படிக்கக் கூடாது என்று தடை போட்டுவிட இயலுமா?

கோ எஜுகேஷன்தான் இதற்கெல்லாம் காரணம். எனவே, ஆண்கள் பள்ளியில் ஆண்களையும், பெண்கள் பள்ளியில் பெண்களையும் சேர்த்துவிட்டால், இந்தப் பிரச்சினை வராது என நாம் கூறலாம். ஆனால், இது எல்லா இடங்களுக்கும் பொருந்துமா? பெண்களுக்கெனத் தனியாகப் பள்ளியோ கல்லூரியோ இல்லாத பல ஊர்களில் நம் குழந்தைகள் உயர்கல்வி கற்பது எப்படி?

அடிப்படை மார்க்கக் கல்வி

சிறு வயதிலேயே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான அடிப்படைக் கருத்துகளை குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்துவிட்டால், இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுத்து விடலாம். உண்மைதான்.

சிறு வயதிலேயே "குர்ஆன் மதரசா' எனப்படும் ஆரம்ப அரபிப் பாடசாலையில் குழந்தைகள் சேர்ந்து, குர்ஆன் ஓதக் கற்று, மார்க்கச் சட்டங்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் அறிந்து கொண்டால், பின்னாளில் எவ்வளவு பெரிய படிப்புகளைப் படித்தாலும் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் இருப்பார்கள். முந்தைய தலைமுறையினர் அப்படித்தான் வளர்ந்தார்கள்.

இதற்குக் காரணம் இல்லாமலில்லை. பசு மரத்தில் ஆணி அறைந்தார் போன்று, இளம் உள்ளத்தில் இறையுணர்வு, இறையச்சம், மறுமை நம்பிக்கை, பெற்றோரின் உரிமைகள், பிள்ளைகளின் கடமைகள், பாலியல் தவறுகளால் விளையும் தீமைகள் உள்ளிட்ட பால பாடங்களைப் பதித்துவிட்டால், அது என்றென்றும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும்.

தினகரன் நாளிதழில் வந்த ஒரு செய்தி
ஆனால், இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் இதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது தான் பெரும் கொடுமை. காலையில் எழுந்தவுடன் அரைகுறையாகக் காலைக் கடனை முடித்துக் கொள்ளும் மழலையர், புத்தக மூட்டைகளைச் சுமந்துகொண்டு பள்ளிக்குச் சென்றுவிடுவர். பல வீடுகளில் குழந்தைகள் பள்ளிக் கூடத்துக்குச் செல்லும்வரை பெரியவர்கள் எழுந்தே இருக்கமாட்டார்கள்.


மதியம் அல்லது மாலை நேரம் வீடு திரும்பியபின் சிறிது நேர விளையாட்டு. பின்னர் மீண்டும் வீட்டுப்பாடம். அத்துடன் டியூஷன். பெரியவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பே குழந்தைகள் உறங்கிவிடுவார்கள். இப்படி தந்தை - மகன் சந்திப்பே பல நாட்கள் நடக்காமல் போய்விடுவதும் உண்டு. இந்த நிலையில் மதரசாவுக்குக் குழந்தைகளை அனுப்ப நேரம் எங்கே? இப்படி பெற்றோர் அலுத்துக்கொள்கிறார்கள்.

தனி உஸ்தாதை நியமித்து வீட்டிலேயே மார்க்க வகுப்பு நடத்தலாம். ஆனால், இது எல்லாருக்கும் சாத்தியமா? வசதி இல்லாதோர் எத்தனையோ பேர்! வசதி இருந்தாலும் உஸ்தாது கிடைக்க வேண்டும். அவர் பொறுப்போடு வந்து கற்பிக்க வேண்டும். குழந்தைகளும் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.

நாலு நல்ல வார்த்தை

இதுதான் இல்லை. வளரும் பிள்ளைகள் நாலு நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டுமல்லவா? அந்த வாசலும் அடைபட்டுக் கிடக்கிறது. பள்ளி, கல்லூரிகளின் வகுப்பு நேரங்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயானைக் கேட்பதற்குக்கூட அவகாசம் அளிப்பதில்லை. விடுமுறை நாட்களோ வெளியூர் பயணங்கள், குடும்ப நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் கிளாஸ்கள் எனக் கழிந்துவிடுகின்றன.

மாணவிகளின் நிலை இதைவிட மோசம். மார்க்க உரைகளைக் கேட்பதற்கான முகாந்தரமே அவர்களுக்குக் கிடையாது. ஜும்ஆ இல்லை; சிறப்பு பயான்கள் இல்லை; நல்ல புத்தகங்கள் நம் வீடுகளில் கிடைப்பதில்லை. பல வீடுகளில் இஸ்லாமிய இதழ்களோ நூல்களோ மருந்துக்குக்கூட கண்ணில் படுவதில்லை.

தொலைக்காட்சி உரைகளிலோ -சிலவற்றைத் தவிர- விவரங்களைவிட விரசங்களே அதிகம். அடையாளப்படுத்தவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காசு கொடுத்து நடத்துகிறார்கள். தற்புகழ்ச்சிதான் அதில் மிகைக்கிறது; இறைநெறிகள் சொற்பமே. குறிக்கோல் விளம்பரம். அதில் உண்மையான குறிக்கோல் அடிபட்டுப்போகிறது.

தேர்ந்தெடுப்பு முக்கியம்

இதற்கு ஒரே தீர்வாக, முஸ்லிம்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்கலாம் என்றால், அங்கு மட்டும் என்ன வாழ்கிறது என்றே கேட்கத் தோன்றுகிறது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் பலவற்றில், பெயருக்குக்கூட இஸ்லாத்தைக் காண முடியவில்லை. அரபி மொழி வகுப்புகளோ, இஸ்லாமிய நீதி போதனை வகுப்புகளோ அங்கு நடப்பதில்லை. நடக்கும் ஒருசில இடங்களிலும் வேண்டா வெறுப்பாக நடத்தப்படுகின்றன; மாணவர்கள் வருவதில்லை.

பாடத்திட்டத்திலேயே இஸ்லாமியப் பாடங்கள் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் சில உள்ளன. எல்.கே.ஜி.யில் தொடங்கி மேல்வகுப்புவரை குர்ஆன் பாடங்களும் மார்க்க விளக்கங்களும் அங்கு வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பள்ளிகளைக் கைவிட்டு எண்ணிவிடலாம். அவற்றிலும், பள்ளிப் பாடங்களின் தரம் குறையாவண்ணம், தீனிய்யாத்தையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

இதுதான் இன்றைய எதார்த்தம். மறைக்க வேண்டியதில்லை. இந்தச் சூழ்நிலையில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களும் மாணவிகளும் "காதல்' வலையில் சிக்கிக்கொண்டு சீரழிவது நாளுக்கு நாள் பெருகி வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. சுருங்கச்சொன்னால், மார்க்கமே இல்லாத மற்ற மாணவர்களின் நிலைதான் நம் பிள்ளைகளின் நிலையும்.

என்ன செய்யப்போகிறோம்...?

சமுதாய இளவல்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? நம் வீட்டுப் பெண்கள் மாற்றானுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் அவலம் தொடரலாமா? நம் இளைஞர்கள் மாற்றாளுடன் இல்லறம் நடத்தி, நம் வாரிசுகள் அவளது மடியில், அரவணைப்பில், இணைவைப்பில் வாழ்ந்துவரும் கொடுமை நீடிக்கலாமா? சமூக ஆர்வலர்களும் சீர் திருத்தவாதிகளும் சீரியஸாகச் சிந்திக்க வேண்டிய விவகாரமாகும் இது.

இதைத் தடுத்து நிறுத்த வழிகாணத் தவறினோம் என்றால், ஒரு தலைமுறையே மார்க்க மில்லாத தலைமுறையாக, வேற்று மதத் தலைமுறையாக மாறிவிடும் அபாயம் உண்டு. இதன் பாவம் இன்றைய தலைமுறையையே சாரும். நம்மை அல்லாஹ் சும்மா விடமாட்டான்.

அனைவரும் யோசியுங்கள். நல்ல முடிவு காணுங்கள். சுனாமி எச்சரிக்கை செய்தாகி விட்டது. தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வது ஒவ்வொரு வரின் கடமை ஆகும்.

நான் ஒன்று சொல்வேன். பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுதான் முதல் தரமான முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.

பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகத் தந்தை கடுமையாக உழைக்கிறார். உறக்கத்தைத் தியாகம் செய்கிறார். உணவைக்கூட உதறித் தள்ளுகிறார். மகனுக்கு, அல்லது மகளுக்கு வேண்டிய எல்லா வசதி களையும் செய்து கொடுக்கிறார். படிக்க வைக்கிறார்; பட்டமும் பணியும் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால், அவனது எண்ணவோட்டத்தைக் கணிக்கத் தவறிவிடுகிறார்.

தாயும் நாவுக்கு ருசியாகச் சமைத்துப் போடுகிறாள். வகை வகையான ஆடை அணிகலன்களை அணிவித்து அழகு பார்க்கிறாள். பிள்ளையின் மனம் கோணாமல் நடந்துகொள்கிறாள். ஆனால், பிள்ளைகளின் அசைவுகளைக் கண்டு விழித்துக்கொள்ள தவறிவிடுகிறாள். பேணி வளர்த்தல் என்பது உணவு உடையில் மட்டும் அல்ல. பண் பாடு, நாகரிகம், கலாசாரம், மறுமை வாழ்க்கை அனைத்தையும் கண்காணித்துச் சீரமைப்பதும் வளர்ப்புதான்.

நம் வீட்டுப் பிள்ளைகள் யார் யாருடன் பழகுகிறார்கள்? யாருடன் அதிகமாகத் தொலை பேசியில் பேசுகிறார்கள்? ஏன் குழப்பமாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன பிரச்சினை? முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதன் பின்னணி என்ன? தடுமாற்றம் தெரிகிறதே! கலகலப்பு இல்லையே! எதிலும் ஒட்டுதல் காணவில்லையே? காரணம் என்ன?

இப்படியெல்லாம் யோசிக்க வேண்டும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். நீங்கள் காட்டும் பாசத்தால் அவர்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் உங்களிடம் கொட்ட வேண்டும். அதைக் கேட்டு அவர்களைப் பெற்றோர்கள் நல்வழிப்படுத்த வேண்டும்.

அடுத்து எப்பாடு பட்டேனும், சிறு வயதிலேயே அடிப்படை மார்க்கக் கல்வியை நம் குழந்தை களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அவரவர் சூழ்நிலைக்கும் வசதி வாய்ப்புக்கும் ஏற்றவாறு இதற்கு நேரம் ஒதுக்கியாக வேண்டும். மார்க்க அறிவும் இறையச்சமும்தான் பிள்ளைகளைத் தீமைகளிலிருந்து காக்கும் கேடயமாகும்.

வேலைக்குச் செல்லும் பெண்களே!

படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. முஸ்லிம் பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் வேலைக்குச் செல்கிறார்கள். இவர்கள் திருமணத்திற்குமுன், பணியாற்றும் இடத்திலேயே ஆண் துணையைத் தேடிக்கொண்டுவிடுகிறார்கள். அவன் முஸ்லிமா இல்லையா, நல்லவனா ஏமாற்றுக்காரனா என்பதையெல்லாம் பரிசோதித்துப் பார்க்காமல், இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண்ணின் பொருளாதாரத் தேவைகளைத் தந்தையோ கணவனோதான் நிறைவேற்ற வேண்டும். பிறந்த வீட்டில் தந்தையும் உடன்பிறப்புகளும் அதற்குப் பொறுப்பு. புகுந்த வீட்டில் கணவன் பொறுப்பு. தன் தேவைகளைத் தானே நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு ஒரு பெண்ணை நமது மார்க்கம் ஒருபோதும் தவிக்க விடவில்லை.

முஸ்லிம் பெண் தன்னையும் தன் குழந்தை களையும் தானே கவனித்தாக வேண்டும் என்ற நிலை மிகவும் அபூர்வமாக எப்போதாவதுதான் ஏற்படும். பெற்றோர், உடன்பிறப்புகள், கணவன், உறவினர், அரசாங்கம் என யாருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் ஒரு பெண் திண்டாடுகின்ற நிலையில்தான், அவள் வேலை செய்து, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரும்.

தகப்பன் அல்லது கணவனின் கையாலாகாத் தன்மை, ஆடம்பரம் மற்றும் சொகுசு வாழ்க்கை, சுய தம்பட்டம், அடங்காத் தன்மை போன்ற காரணங்களுக்காக இளம்பெண்கள் வேலைக்குச் செல்வதும், அதை முன்னிட்டு குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்ற வழிவகுப்பதும் தேவைதானா? யோசியுங்கள்.

ஆக, கற்பா கல்வியா என்று வந்தால் கற்பையே தேர்ந்தெடுங்கள். இது ஆண்களுக்கும்தான்.

மேலும் அறிய இந்த இணைப்பைச் சொடுக்கிக் காண்க 

WEDNESDAY, JULY 13, 2011


அரபுச் செம்மொழி


. முஹம்மது கான் பாகவி
உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒலிக் குறியீட்டுத் தொகுதியே மொழி அல்லது பாஷை ஆகும். உலகில் தோன்றிய ஒவ்வொரு மொழிக்கும் ஒரு விதத்தில் சிறப்பு உண்டு. எல்லா மொழிகளும் இறைவனால் படைக்கப்பட்டவையே. மொழிகளுக்கிடையே ஏற்றத்தாழ்வோ பாகுபாடோ பாராட்டக் கூடாது.
இருப்பினும்சில மொழிகளுக்குத் தனிச் சிறப்பும் வளமான வரலாறும் இருப்பதை மறுப்பதற்கில்லை. உலக மொழிகளில் சிலதோன்றிய வேகத்தில் எழுத்து வடிவம்கூட பெறாமல் மறைந்துபோனதும் உண்டு. வேறுசில,குறிப்பிட்ட காலம்வரை வாழ்ந்து இறந்துபோனதும் உண்டு. ஆட்சியதிகாரத்தின் துணையால் செல்வாக்குப் பெற்று விளங்கிய சில மொழிகள்அந்த ஆட்சி ஒழிந்ததோடு காணாமல் போனதும் உண்டு.
ஒரு மொழி மக்கள் நாவுகளில் தவழத் தொடங்கியதிலிருந்துபடிப்படியாக வளர்ந்துஇலக்கணம் கண்டுஇலக்கியம் படைத்துகாப்பியங்கள் பல உருவாக்கிவேதமொழியாக பரிணமித்துக் காலத்தால் அழியாமல் இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்றால்அம்மொழி முதன்மை மொழி என்ற தகுதியைப் பெறுவது இயற்கைதாú!
இந்த வகையில்இன்று உலகில் ஆறாயிரத்துக்கும் அதிகமான மொழிகள் மக்களால் பேசப்படுகின்றனஅவற்றில் ஆறு மொழிகளே செம்மொழி என்ற தகுதியை ஆரம்பமாகப் பெற்றனசிலர் சீனம்பாரசீகம் ஆகியவற்றைச் சேர்த்து எட்டு மொழிகள் செம்மொழிகள் என்பர். செம்மையான -அதாவது பண்பட்டதும் சிறப்பும் உயர்வும் பெற்றதுமான-மொழியே செம்மொழி (ஈப்ஹள்ள்ண்ஸ்ரீஹப் கஹய்ஞ்ன்ஹஞ்ங்) எனப்படுகிறது.
1. அரபி 2. தமிழ் 3. சமஸ்கிருதம் 4. ஹீப்ரு 5. லத்தீன் 6. கிரேக்கம் ஆகிய ஆறு செம்மொழிகளில் சமஸ்கிருதமும்,எபிரேயு என்ற ஹீப்ரும் வெறும் வேத மொழிகளாக மட்டுமே விளங்குகின்றனலத்தீன்இத்தாலி மொழியாக மருவிவிட்டது. கிரேக்கம்கிரேக்க நாட்டில் மட்டும் சுருங்கிவிட்டது.
தமிழ்ச் செம்மொழிஉலகில் ஏழரைக் கோடி மக்களால் பேசப்படும் மொழியாகத் திகழ்கிறது. உலகில் எண்பது நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கின்றனர். தொன்மையும் இலக்கண இலக்கியத் தகுதிகளும் செம்மொழித் தமிழுக்கு நிறையவே உண்டு. தமிழுக்குச் செம்மொழித் தகுதி இந்த நூற்றாண்டில்தான் அதிகாரப்பூர்வமாகக் கிடைத்தது என்றாலும்அத்தகுதி தமிழுக்கு என்றும் உள்ளது.
இந்நிலையில்அரபுச் செம்மொழி பற்றி ஆய்வு செய்வதும் அதன் பழமைஇலக்கிய வளம் உள்ளிட்ட செம்மொழிக் கூறுகள் குறித்து ஆராய்வதும் மொழியியல் ஆர்வலர்களுக்கு அவசியமாகிறது. இந்த ஆய்வுமொழியியல் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
செம்மொழிக்கு என் தகுதிகள் வேண்டும் என்பது தொடர்பாக மொழி அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தாலும்முக்கியமான தகுதிகள் எனச் சிலவற்றைக் குறிப்பிடலாம். 1. தொன்மை. உலக மொழிகளிலேயே அரபு மொழி மிகவும் பழைமையானது என்பதை நிறுவ முடியும். 2. இலக்கிய வளம். அரபு மொழி இலக்கியம் பார் போற்றும் அளவுக்கு வளமானதுவனப்பு மிக்கது. 3. சொல் வளம். 4. இலக்கண விதிகளும் இலக்கிய விதிகளும் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். 5. மக்கள் வழக்கில் வாழும் மொழியாக இருக்க வேண்டும்.
தொன்மையான மொழி
அரபு மொழி தொன்மையானது என்பதை ஆதாரத்துடன் காணலாம். இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்கள், "ஜுர்ஹும்என்ற யமன் (ஏமன்) நாட்டினரிடமிருந்து அரபு மொழியைக் கற்றுக்கொண்டார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (ஸஹீஹுல் புகாரீஹதீஸ் - 3364)
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) - ஹாஜர் (அலை) தம்பதியருக்குப் பிறந்தவரே இஸ்மாயீல் (அலை) அவர்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் (ஆப்ரகாம்) கி.மு. 2160ல் கல்தானியா (இராக்) நாட்டில் "ஊர்' (மத) எனும் ஊரில் பிறந்துகி.மு. 1985ல் மறைந்தார்கள். வயது: 175. மொழி: ஹீப்ரு. அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் (ஹாகர்),எகிப்தில் "ஹஃப்ன்எனும் ஊரில் பிறந்தார்கள். மொழி: சிரியாக். அரபுகளின் தந்தை என அழைக்கப்படும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் (இஸ்மவேல்)கி.மு. 2070ல் எகிப்தில் பிறந்துசஊதியில் உள்ள மக்காவில் வாழ்ந்து கி.மு. 1933ல் மறைந்தார்கள். (ஃபத்ஹுல் பாரீதஃப்சீர் மாஜிதீ)
இதனால்தான்அன்னை ஹாஜர் (அலை) அவர்களை அரபியரின் அன்னை என நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வர்ணித்தார்கள் (புகாரீஹதீஸ் - 3358). இதிலிருந்துகி.மு. இரண்டாயிரத்திற்குமுன் வாழ்ந்த இஸ்மாயீல் (அலை) அவர்கள் யமனியரான ஜுர்ஹும் குலத்தாரிடம் அரபு மொழியைக் கற்றார்கள் என்பது உறுதியாகிறது.
இந்த ஜுர்ஹும் குலத்தார் யார்ஜுர்ஹும் பின் கஹ்த்தான் பின் ஆமிர் பின் ஷாலக் பின் அர்ஃபக்ஷத் பின் சாம் பின் நூஹ். அதாவது நபி நூஹ் (அலை) அவர்களின் (நோவா) ஆறாவது தலைமுறையில் பிறந்த ஜுர்ஹும் என்பாரும் அவருடைய சகோதரர் கத்தூரா என்பவரும்தான் முதலில் அரபி மொழியில் பேசியவர்களாவர். (ஃபத்ஹுல் பாரீ)
நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்முதலில் அரபு மொழி பேசியவர் இறைத்தூதர் ஹூத் (அலை) அவர்கள் ஆவார் என்று தெரிவிக்கிறார்கள் (அத்துர்ருல் மன்ஸூர்). நபி ஹூத் (அலை) அவர்கள்நூஹ் (அலை) அவர்களின் நான்காவது தலைமுறை ஆவார். அவரது வமிசப் பரம்பரையை விவிலியம் பழைய ஏற்பாடுநோவா - சேம் - அர்பக்சாத் - சாலா - ஏபேர் (ஹூத்) எனப் பட்டியலிடுகிறது.
நபி ஹூத் (அலை) அவர்கள் கி.மு. 2538ல் பிறந்தார்கள்பழங்கால அரபுச் சமூகத்தாரான "ஆத்கூட்டத்தாருக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். அன்னாருடைய மக்களில் "கஹ்த்தான்என்பவரே யமனியரின் தந்தை ஆவார் (அத்துர்ருல் மன்ஸூர்). இதிலிருந்து அரபு மொழி கி.மு. 2500க்கு முன்பே தோன்றிவிட்டதென அறிய முடிகிறது.
அரபியரை மூன்று வகையினராக வரலாற்றாசிரியர்கள் இனம் கண்டுள்ளனர். 1. பழங்குடி அரபியர் (அல்அரபுல் ஆரிபா). இவர்கள்தான்ஆத் மற்றும் ஸமூத் கூட்டத்தார். பஹ்ரைன்யமாமா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தஸ்ம்,ஜதீஸ் ஆகிய கூட்டத்தாரும் இவர்களில் அடங்குவர். 2. கலப்பு அரபியர் (அல்அரபுல் முதஅர்ரிபா). "கஹ்த்தான்'குலத்தாரைப் போன்று கலப்பு அரபி பேசியோர். 3. தூய அரபியர் (அல்அரபுல் முஸ்தஅரிபா). இவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழிவந்த கலப்பில்லாத அரபி பேசியோர்.
இதிலிருந்து மேற்சொன்ன இரு தகவல்களும் சரியானவையே என்பதையும்கி.மு. மூவாயிரமாவது ஆண்டிலேயே அரபு மொழி பிறந்துவிட்டது என்பதையும் அறியலாம். மொத்தம் ஐயாயிரம் ஆண்டு பாரம்பரியம் மிக்கப் பழமையானமொழி அரபு மொழி ஆகும்.
இலக்கிய வளம்
இலக்கியத்தில் கவிதை முதலிடம் பெறும். ஒரு மொழியில் வெளிவந்துள்ள கவிதை நூல்கள் அதன் செம்மொழித் தகுதிக்குச் சிறந்த சான்றாகும்.
அரபு மொழிக் கவிதைகளை -அதன் கால அளவை முன்னிட்டு- ஏழு அணிகளாக (தபகா) வகைப்படுத்துவர். ஒவ்வோர் அணியிலும் ஏழு கவிஞர்கள் இடம்பெறுகின்றனர்.
முதல் அணியினர்: இஸ்லாத்திற்குமுன் பிரபலமாக விளங்கிய ஏழு கவிஞர்களின் கவிதைகள் (அஸ்ஸப்உல் முஅல்லகா). இக்கவிதைகள் திருமக்காவில் கஅபா ஆலயத்தில் தொங்கவிடப்பட்டுமொழி ஆர்வலர்களின் அங்கீகாரம் பெற்றவை ஆகும்.
1. கவிப்பேரரசர் இம்ரஉல் கைஸ். இவர் கி.பி. 500ல் நஜ்த் பகுதியில் பிறந்து "அன்கரா'வில் கி.பி. 540ல் மறைந்தார். இம்ரஉல் கைஸ் பின் ஹஜர் பின் அல்ஹாரிஸ் என்பது இவரது முழுப் பெயர். இவரது 1736 ஈரடிப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.
2. ஸுஹைர் பின் அபீசல்மா. 1864 ஈரடிப் பாடல்கள். 3. நாபிஃகா (கி.பி. 604). அரபுக் கிறித்தவரான இவர் 2804 ஈரடிப் பாடல்களை இயற்றிவர். 4. அஃஷா பக்ர் பின் வாஇல். 2330 ஈரடிப் பாடல்கள். 5. லபீத் பின் ரபீஆ (கி.பி. 560-661). 2061ஈரடிப் பாடல்கள். 6. அம்ர் பின் குல்ஸூம். ஆறாம் நூற்றாண்டு அரபுக் கவிஞரான இவர் ஒரு கிறித்தவர். சமூக மற்றும் வரலாற்றுப் படிவமாக விளங்கும் இவரது கவிதைத் தொகுப்பு 2862 ஈரடிப் பாடல்களைக் கொண்டதாகும்.
7. தரஃபா பின் அல்அப்த் (கி.பி. 543-659). பஹ்ரைனில் பிறந்த இவரது தொகுப்பில் 1531 ஈரடிப் பாடல்கள் உண்டு. இவரது கவிதைத் தொகுப்பு ஒன்று 1951ல் பாரிசில் மாக்ஸ் என்பவரால் அச்சிடப்பட்டது.
இரண்டாவது அணியினர்: ஏழு வெகுஜன கவிஞர்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் கால கவிஞர்களானஇவர்களின் தொகுப்புகளை "முஜம்ஹராஎன்பர்.
1. உபைத் பின் அல்அப்ரஸ். ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் கி.பி. 554ல் கொல்லப்பட்டார். 2. அஷ்ரா பின் ஷத்தாத் (கி.பி. 525-615). 3. அதீ பின் ஸைத் (கி.பி. 587). 4. பிஷ்ர் பின் அபீகாஸிம் 5. உமய்யா பின் அபிஸ்ஸல்த் (கி.பி.630). அறியாமைக் கால கவிஞராக இவர் இருந்தாலும்ஏகஇறைக் கொள்கையைத் தம் கவிதைகளில் முன்னிலைப்படுத்தினார். இவருடைய கவிதைகள் 1911ல் பிரசுரமாயின. 6. கதாஷ் பின் ஸுஹைர். 7. நிம்ர் பின் தவ்லிப்.
மூன்றாவது அணியினர்: அறியாமைக் கால கவிஞர்களான இவர்களின் கவிதைகள்செவ்வரபு மொழிக் கவிதைகள் (முன்தகயாத்) என அறியப்படுகின்றன. 1. முசய்யப் பின் அலஸ். 2. மர்கஷ் 3. முத்தலம்மிஸ் 4. உர்வா பின் அல்வர்த் 5.முஹல்ஹில் பின் ரபீஆ 6. துரைத் பின் அஸ்ஸம்மா 7. முத்தனக்கில் பின் உவைமிர்.
நான்காவது அணியினர் (இஸ்லாத்திற்குப் பிந்தியோர்). இவர்கள் சமயப் புலவர்கள் (மத்ஹபாத்) எனஅறியப்படுகின்றனர். 1. ஹஸ்ஸான் பின் ஸாபித் 2. அப்துல்லாஹ் பின் ரவாஹா 3. மாலிக் பின் அஜ்லான் 4. கைஸ் பின் அல்கத்தீம் 5. உஹைஹா பின் அல்ஜலாஹ் 6. அபூகைஸ் பின் அல்அஸ்லத் 7. அம்ர் பின் இம்ரஉல் கைஸ்.
ஐந்தாவது அணியினர்இரங்கற்பாக்களையும்ஆறாவது அணியினர் மதச்சார்பற்ற கவிதைகளையும்ஏழாவது அணியினர் வீரக் கவிதைகளையும் புனைந்தனர்.
இவையன்றிதீவானு ஹமாசாதீவானு முத்தனப்பிதீவானுல் மஆனீ போன்ற கவிதைத் தொகுப்புகளும் பிரபலமானவை ஆகும். இவற்றில் பல்வேறு கவிஞர்கள் இயற்றிய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
செம்மறை

திருக்குர்ஆன் ஒரு செம்மறை ஆகும். அதன் நடை கவிதையும் அல்லசாதாரண வசன நடையும் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு புது நடை ஆகும். ஆறாம் நூற்றாண்டில் (கி.பி. 610-632) அருளப்பெற்ற திருக்குர்ஆனில் சொல் வளம்பொருள் செறிவுஇலக்கணம்இலக்கியம்பண்பாடுநாகரிகம்வரலாறு என எல்லா செம்மொழிக் கூறுகளும் ஒருங்கே அமைந்துள்ளனஎல்லாவற்றுக்கும் மேலாக அது ஓர் இறைமறை என்பதே அதற்குரிய உயர் தகுதியாகும்.
திருக்குர்ஆனின் இலக்கிய நயத்திற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். உவமைகள் கூறுவதில் திருக்குர்ஆனை விஞ்ச எதுவுமில்லை. நரகம் மிகப் பெரியதுஎத்தனை பேருக்கு வேண்டுமானாலும் அதில் இடம் இருக்கும்அவ்வளவு பிரமாணடமானதுவிசாலமானது. இதைத் திருக்குர்ஆன் சொல்லும் அழகைப் பாருங்கள்.
நாம் நரகத்திடம்கேட்போம்!வயிறு நிரம்பிவிட்டதா?அது கேட்கும்இன்னும் இருக்கிறதா? (50:30)
நபி (ஸல்) அவர்களுக்கு மனவேதனை அளிப்பதற்காகவே, "அவர் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் ஓர் அப்பாவி'என்று எதிரிகள் நகைத்தனர். இது குறித்து குர்ஆன் சொல்லும்:
அவர் ஒரு "காது' (ஹுவ உதுனுன்) என்கின்றனர்;ஆம்! உங்களுக்கு நன்மை தரும் காது. (9:61)
சொல்வளம்
அரபு மொழியின் சொல் வளம் வியப்பூட்டக்கூடியது. சொல் சுருக்கம்பொருள் விரிவு அரபுச் செம்மொழியின் தனிச் சிறப்பாகும். எந்தப் பொருளையும் பிறமொழி கலக்காமல் தூய அரபியில் தெரிவிக்க முடியும். ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள்ஒரே பொருளுக்குப் பல சொற்கள்ஒரே சொல்லுக்கு எதிரெதிர் பொருள்கள் எனச் செம்மொழிக்கான எல்லாத் தகுதிகளும் அரபிக்கு உண்டு.
"ளாத்எனும் எழுத்து அரபு மொழிக்கே சொந்தம். இதனாலேயே அதை "ளாத் மொழி' (லுஃகத்துள் ளாத்) என்றழைப்பர் அரபியர்.
வாழும் மொழி
அரபுச் செம்மொழி வேத மொழியாக மட்டும் இல்லாமல்வழக்கில் வாழும் நவீன மொழியாகவும் விளங்குகிறது. கோடிக்கணக்கான மக்களால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்ற அரபு மொழி பல கோடி மக்களின் தாய்மொழி ஆகும்.
அரபு மொழி ஆசியாஆப்பிரிக்கா நாடுகளில் அதிகமாகப் பேசப்படும் மொழியாகும். எகிப்துசூடான்மொராக்கோ போன்ற ஆப்பிரிக்கா நாடுகள்சஊதிஅரபு அமீரகம்அரபு வளைகுடா போன்ற அரபு நாடுகள் என 24 நாடுகளில் பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியாக அது விளங்குகிறது. அமெரிக்காஐரோப்பா நாடுகளிலும் அரபு மொழி புழக்கத்தில் உள்ளது.
அரபு நாடுகளின் மொத்த மக்கள் தொகை 34 கோடியே 87 லட்சத்து 55 ஆயிரத்து 830. இது 2009 நவம்பர் நிலவரமாகும். இவர்களில் முஸ்லிம்கள்கிறித்தவர்கள்யூதர்கள் எனப் பல மதத்தாரும் உள்ளனர். உலக மக்கள் தொகையில் (680 கோடி) 23 சதவீதமாக உள்ள 157 கோடி முஸ்லிம்கள் தங்களின் வேத மொழி என்ற முறையில் அரபு மொழி அறிந்துள்ளனர்.
உலகில் உள்ள 5 கண்டங்களில் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி வாழும் முஸ்லிம்கள் தங்கள் தொழுகை,ஹஜ்துஆ போன்ற வழிபாடுகளில் அரபு மொழி குர்ஆன் வசனங்களையும் துதிகளையும் ஓதிவருகின்றனர்.
இலக்கண இலக்கிய விதிகள்
அரபு இலக்கணம்அரபு இலக்கியம் தொடர்பான சட்ட விதிகள் முறையாக வகுக்கப்பட்டுஆறாம் நூற்றாண்டின் இறுதியிலேயே நூல் வடிவம் பெற்றுவிட்டனஇலக்கணம்இலக்கியம்கதைகவிதைகாப்பியம் எனச் செம்மொழியின் விரிவான ஆக்கங்கள் இலட்சக்கணக்கில் அரபி மொழியில் உண்டு.
ஆறாம் நூற்றண்டைச் சேர்ந்த திருக்குர்ஆú அரபு இலக்கணத்திற்கும் அரபு இலக்கியத்திற்கும் ஒரு முன்úனாடி நூலாகும். அரபு இலக்கணம் மற்றும் இலக்கியத்தைச் சொல்லும் செய்யுள்களும் பாடல்களும் பல உள்ளன.இவையெல்லாம் இன்றளவும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடநூல்களாக இடம்பெற்றுள்ளன.
காதல் காவியம்
லைலா - மஜ்னூன் போன்ற ஏராளமான காதல் காவியங்களும் 13ஆம் நூற்றாண்டு அல்ஃப் லைலா (ஆயிரம் இரவுகள்)ஏழாம் நூற்றாண்டு கலீலா வ திம்னா போன்ற அரபுக் கதைகளும் செம்மொழி அரபிக்கு அழகு சேர்க்கும் அணிகளாகும்.
யமன் நாட்டைச் சேர்ந்த "பனூ உத்ராஎன்ற குலத்தார் காதல் மன்னர்கள். இவர்கள் காதலுக்கு முன்னுதராணமாக விளங்கியவர்கள். காதலுக்காக உயிரையே துறக்கவும் தயங்காத மக்கள். அவர்களில் ஓர் இளைஞனின் காதல் காவியம் இதோ!
அரபு மொழி அறிஞரான அஸ்மயீ அபூசயீத் அப்துல் மலிக் (கி.பி. 740-828) ஒருமுறை யமன் சென்றிருந்தார். பனூ உத்ரா கூட்டத்தார் வசிக்கும் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் ஒரு கல்லில் ஒரு கவிதை எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்:
காதலர்களே!இறைமீது ஆணை!சொல்லுங்கள்காதல் வயப்பட்டகாளைஎன்ன செய்ய வேண்டும்?
இந்த வரிகளுக்குக் கீழே அஸ்மயீ இப்படி எழுதினார்:
காதலைஅவன் கையாள்வான்மென்மையாக!மறைப்பான்இரகசியத்தை!எல்லாக் கட்டங்களிலும்காப்பான்பொறுமைகாட்டுவான்பணிவு!
மறுநாள் அஸ்மயீ வந்து பார்த்தார். தம் வரிகளுக்குக் கீழே வேùறாரு பாடல்:
மென்மையா?எப்படி முடியும்?காதலோஅவனைக் கொல்கிறதுஉயிரோஒவ்வொரு நொடியும்பிரிகிறது!
இதற்குக் கீழே அஸ்மயீ எழுதிவைத்தார்:
பொறுமை காக்க
இரகசியம் மறைக்க
முடியாவிட்டால்,
ஒரே வழி
சாவுதான்!
மறுநாள் வந்து அஸ்மயீ பார்த்தபோதுஅந்தக் கல்லில் தலைவைத்து இளைஞன் ஒருவன் செத்துக் கிடந்தான். கல்லில் இப்படி எழுதியிருந்தான்:
கேட்டோம்பணிந்தோம்பின்பு இறந்தோம்!இணைய முடியாமல்போனஅவளுக்குசொல்வீர்என் சலாம்!
Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger