அருட்கொடை

அருட்கொடை

அஸ்ஸலாமு அழைக்கும்!!!சகோதரர்களே அல்லாஹ் நமக்கு எவ்வளவோ அருட்கொடைகளை வழங்கியுள்ளான்,ஆனால் நாம் எந்த அளவு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிறோம்? சற்று சிந்தியுங்கள்!நம்மில் நிறையபேர் சிறு சிறு சோதனைகெல்லாம் சோர்ந்துபோய் "அல்லாஹ்விற்கு இரக்கமே இல்லையா? என்னை இப்படி சோதிக்கிறானே" என்று பேசுவதை பார்க்கிறோம்.சகோதரர்களே இந்த போட்டோவில் உள்ளவரை பாருங்கள் எப்படி புன்முறுவலுடன் சிரிக்கிறார்,இவரைவிடவுமா அல்லாஹ
் நம்மை கீழாக படைத்துள்ளான்,இவரை பார்த்தாவது அல்லாஹ்விற்கு நன்றியுள்ள அடியானாக நாம் மாறுவோமா!!! ###(திருக்குர்ஆன்-16:18.)இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.###(திருக்குர்ஆன்-17:83.)நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.###(திருக்குர்ஆன்-31:20)நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர்.###

Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger