நாம் முஸ்லிம் உம்மா - சிறுபான்மையினர்? சிந்திக்க...
பெரும்பான்மையாக ஒரு நாட்டில் வாழ்வோரை விட்டு மொழி, இனம், மதம் என்பவற்றில் ஒன்றாலோ பலவற்றாலோ வேறுபட்டு ஒரு பிரிவினர் வாழும் போது அவர்களை நவீன அரசியற் சொற்பிரயோகத்தில் சிறுபான்மையினர் என்கிறோம். இப்பிரயோகத்தை பல்வேறு கொள்கைகளும், சட்ட ஒழுங்குகளும் நவீன காலத்தில் வகுக்கப்பட்டுள்ளன. அக் கொள்ளைப் பின்னணியிலேயே எமது போராட்டங்களும் அமைந்து வருகின்றன.
இன்னொரு புறத்தால் எமது இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் : தார்-அல் குப்ர், தார் -அல்இஸ்லாம்- இறை நிராகரிப்பு அகிலம், இஸ்லாமிய அகிலம் என உலகைப் பிரித்தார்கள். நிராகரிப்பின் சட்டம் ஆதிக்கம் பெற்றிருக்கும் அகிலம், இஸ்லாமிய சட்டம் ஆதிக்கம் பெற்றுள்ள அகிலம் என்பது இதன்பொருள். அதாவது இங்கு மக்கள் தொகை, இனம், மொழி, இனம் என்பவை கவனத்திற் கொள்ளப்படவில்லை.
18ம் நூற்றாண்டுடன் தோன்றிய தேசிய அரசுகளுடனேயே சிறுபான்மை என்ன கருத்தாக்கமும் ஆரம்பமானது. பழைய காலத்தில் நாடுகள் எல்லைகளால் வரையறுக்கப்படவில்லை. தனது நாட்டு எல்லையை பலமுள்ள எந்த மன்னனும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். பலமுள்ளவரை அவனது நிலைப்பகுதியாகவே அது இருக்கும். பெரும்பாலும் மதம், கொள்கையின் அடிப்படையிலேயே அப்போது மக்கள் பார்க்கப்பட்டார்கள் இவ்வரலாற்றுப் பின்னணியிலேயே அந்த இஸ்லாமியப் பிரயோகங்கள் உருவாயின. அப்பிரயோகங்களுக்கு எந்த இஸ்லாமியப் பின்னணியும் இல்லை என நாம் கூறவில்லை. ஆனால் இந்த வரலாற்று சூழ்நிலைக்கு அக்கருத்துருவாக்கத்தின் மீதான ஒரு தாக்கமுள்ளது என்றே சொல்ல வந்தோம்.
தேசிய அரசுகளின் தோற்றத்தின் பின்னர் நிலைமை மாறியது. வரையறுத்த எல்லைகள் கொண்ட தேசங்கள் உருவாயின. இன்னொரு நாட்டின் மீது படையெடுத்து அதன் நிலப் பகுதிகளை ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரல் தவறாக குற்றமாகக் கருதப்படலாயிற்று.
இப்பின்னணியில் பிரஜாஉரிமை, நாட்டுப் பற்று, கடவுச்சீட்டு போன்ற பல்வேறு சட்டங்களும், கோட்பாடுகளும், ஒழுங்குகளும் தோன்றின சிறுபான்மை என்ற கருத்தாக்கமும் இந்த சர்வதேச சூழ்நிலையின் விளைவேயாகும்.
இப்போது நாம் எவ்வாறு சாதிக்க வேண்டும் :
“உம்மா” என்ற இன, மொழி, புவியியல் எல்லை கடந்த கோட்பாடு தேசியம், நாடு, இனம், மொழி என்ற கருத்தாக்கம். இவ்விரு கோட்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரன்பாடானதா? இவற்றிடையே இணக்கம் காண முடியுமா?
சிறுபான்மை என்ற கருத்தாக்கத்தினுல் எம்மை ஆக்கிக் கொண்டு உரிமைகள் சலுகைகள் அதையொட்டிய போரட்டங்கள் என்போமா?!
அல்லது சர்வதேச உம்மா என்ற கோட்பாட்டின் கீழ் அதனைப் பின்பற்றிய கருத்தாக்கங்களை உருவாக்கிக்கொள்வோமா? அல்லது அது யதார்த்தம் என்று சிந்திப்போமா அல்லது இரண்டிற்குமிடையே இணக்கம் காணும் வழியேதுமுள்ளதா? இப்பிரச்சினையை விளக்கும் அல்குர்ஆன் வசனங்களும் இறைதூதர் (ஸல்) வார்த்தைகளும் உண்டா? எமது சமூக வாழ்வின் கோட்பாட்டை உருவாக்கும் இக்கேள்விகள் பற்றி ஆழ்ந்து சிந்திப்போம்.
கருத்துரையிடுக