மரணம்.....
மரணம்..... அந்த சொல்லின்
அர்த்தம் கூட எனக்கு இன்னும்புரியவில்லை....
அதற்குள் நான் மரணித்து விட்டேன்.
எதற்காக இந்த மரணம் என்பதும்
இன்னும் விளங்கிடவில்லை..
தந்தையின் கை பிடித்து
நடைபழகும் வயதினிலே
குண்டு ஒன்று மார்பு துளைத்து
மூச்சடங்கி கிடக்கின்றேன்...
தாயின் தாலாட்டு கேட்டு
தூங்கும் வயதில்...
மயானத்தின் அமைதியில்
நிரந்தரமாக தூங்கப்போகிறேனே...
சொந்தங்களின் தோளில் தூக்கி
கொஞ்சி விளையாடும் வயதில்
சொந்தங்கள் நால்வர்
தூக்கிசெல்லும் நிலையில் உள்ளேனே...
தலையில் பூச்சூடி அழகு
பார்பவர்கள் எல்லாம்
என் உடலில் பூவைத்து
அழுதுகொண்டிருக்கிறார்களே...
என்னை சுற்றி அழுது கொண்டிருக்கும்
என் நண்பர்களுக்கு தெரியவில்லை
நாளை அவர்களுக்கும் இதே நிலைதான் என்று...
இன்னும் புரியவில்லை
இரக்கமின்றி கொல்வதற்கு
நாங்கள் என்ன பாவம்
செய்தோமென்று...............
இஸ்ரேலின் தாக்குதலில் உயிர் துறந்த
ஒரு பாலஸ்தீனிய சிறுமியின் ஆன்மா....
கருத்துரையிடுக